மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்.

 


 மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், தொற்றா நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை வழங்கும்
வகையில் மருத்துவ முகாமொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், தொற்றா நோய் தடுப்பு பிரிவினால் நடாத்தப்பட்ட மருத்துவ முகாமில், ஆசிரியர்கள்,
கல்வி சாரா ஊழியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
புனித மிக்கேல் கல்லூரி அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் உட்பட பிராந்திய சுகாதார சேவைகள்
தொற்றா நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.