உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கலை இரத்துச் செய்ய மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஆலோசனை சார் குழுக் கூட்டம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்க குழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இரத்து செய்வதற்கு அரச நிர்வாகம் ,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள், அமைச்சின் ஆலோசனைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது
மாகாண சபைகள். உள்ளூராட்சி மன்றங்கள், அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று(21) கூடிய அமைச்சு சார் ஆலோசனை குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது





