இலங்கையில் கொமர்ஷல் வங்கி மீண்டும் ஒரு தடவை ஆசிய அபிவிருத்தி வங்கியின்
(ADB) வர்த்தக மற்றும் நிதிப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்கான 'முன்னணி பங்காளி
வங்கியாக' பெயரிடப்பட்டுள்ளது. தேசியப் பொருளாதாரத்துக்கு வங்கி அளித்து
வருகின்ற பங்களிப்புக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள ஒரு உத்தரவாதமாக இது
அமைந்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது வருடமாக கொமர்ஷல் வங்கிக்கு இந்த கௌரவம்
கிடைத்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முன்னணி பங்காளி வங்கிகளின்
பங்களிப்புக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தக மற்றும் விநியோக
சங்கிலி நிதித் திட்டத்துக்கான (TSCFP) விருது வழங்கும் நிகழ்வில் இந்த
அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான இந்நிகழ்வு சிங்கப்பூரின்
ஜேன் சிங்கப்பூர் டாங்லின் பை ஷங்கிரி லா வில் இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான பதிவுகளுக்காக கொமர்ஷல் வங்கிக்கு இவ்விருது
வழங்கப்பட்டுள்ளது. 2022 ஜுலை 1 முதல் 2023 ஜுன் 30 வரையான காலப் பகுதியில்
இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தக மற்றும் விநியோக சங்கிலி
நிதித் திட்டத்தின் ஆகக் கூடுதலான அளவு பரிமாற்றத்துக்கான விருதாக இது
அமைந்துள்ளது இந்த TSCFP விருதுக்கு 15 வகைப்படுத்தலின் கீழ் தெரிவு
செய்யப்பட்ட 25 வங்கிகளில் கொமர்ஷல் வங்கியும் இடம்பிடித்துள்ளது.





