விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோரால் கோரப்பட்டுள்ளது.

 


எட்டு வயதான சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோரால் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன் கடிதத்தின் பிரதிகள் சுகாதார அமைச்சு, வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்புகளுக்கும் அனுப்பபட்டுள்ளது.