சிவா முருகன்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு, விவேகா பழைய
மாணவர் சங்கத்தினரால் ரூபா 750,000.00 பெறுமதியான BANDவாத்தியக் கருவிகள்
மற்றும் HOCKEY SHIN GUARDS விளையாட்டு உபகரண பொருட்கள் என்பன
2023.09.22- இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30- மணிக்கு ஜோசப் பரராச சிங்கம்
அரங்கத்தில் வைத்து பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் அவர்களிடம்
கையளிக்கப்பட்டது .
கீழ்காணும் உபகரணங்கள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இவ் நிகழ்வில் வணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்தாஜீ மஹராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் ,மேலும் உடற்கல்வி இணைப்பாளர் திருகோணமலை வளாகம்- கிழக்கு பல்கலைக்கழகம், மற்றும் ஹோக்கி பயிற்றுவிப்பாளர் கிழக்கு பல்கலைக்கழகம் திரு கிருஷ்ணபிரபு அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் நிதி அனுசரணையாளர்களின் நேரடி உறவினர்கள் , சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தினர் ,சித்தி விநாயகர் -பேச்சி அம்மன் ஆலய பொருளாளர் , KOV-குடும்பத்தினர் , விவேகா பழைய மாணவர்கள் ,விவேகா நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர் ..
கீழ்காணும் உபகரணங்கள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
01 BASE-DRUM
02 CYMBAL
08 SIDE DRUMS
08 TRUMPET
18 HOCKEY SHIN GUARD



































