மட்டக்களப்பு சித்தாண்டியில், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரவைப்
பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி, கால்நடைப் பண்ணையாளர்கள் முன்னெடுத்து
வரும்
போராட்டம் 7வது நாளை எட்;டியுள்ளது.
அரசியல் கட்சிகள், சிவில்
சமூகப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் உட்பட பல தரப்பட்டவர்களும்
கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இரவு-பகலாக, கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள், தமது கோரிக்கைகள்
தொடர்பில் உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தாம்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்கினாலும், அவை
செவிமடுக்கப்படுவதில்லை என்றும், தமது கால்நடைகள், பயிர்ச்
செய்கையாளர்களால்
கொல்லப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





