இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் உட்பட உலகம் முழுவதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கி உள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது.
சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்களின் சமூக வழிகாட்டுதலை மீறுதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே 19 லட்சம் இந்தியர்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.