அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாய் என கூறப்படுகிறது.

 


2023 ஆம் ஆண்டின் ஜூலை மாத புள்ளிவிவரத்தின்படி , நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாய் என கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையை வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அத்தோடு மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணையில், இலங்கையில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு 15,978 ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.