பிரித்தானிய ஒருபானை அமைப்பினரால் கற்றல் செயற்பாட்டுக்காக ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு .

 

 






 








































பெரிய பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒருபானை  தொண்டு நிறுவனம் வடக்கிலும், மலையகத்திலும் மற்றும் மட்டக்களப்பிலும் அர்ப்பணிப்புடன்  சேவையாற்றி வருகிறது.  
 மட்டக்களப்பில் கிரான், வவுணதீவு மற்றும் வாகரையில் வறிய முதியவர்களுக்கு மாதாந்தம்  உலர் உணவுகள் வழங்கி வருகிறது .  வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் பெற்றுக்கொடுக்கிறது .    கிராமங்களில் இருந்து   நகர்ப்புற பாடசாலை விடுதிகளில் தங்கி   உயர்தரத்தில்  விஞ்ஞானம் கல்வி  பயிலும்   மாணவர்களின் நலன் கருதி   வைத்தியகலாநிதி  அருள்நிதி அவர்கள்  விடுத்த வேண்டுகோளின் பேரில்  மாணவர்  கற்றல் செயற்பாடுகளுக்காக  ஒரு பகுதி  அனுசரணையையும்  இவ் அமைப்பு  வழங்கி வருவது குறிப்பிடதக்கது    


   பெரிய கல்லாற்றில்  அமையப்பெற்ற  மட்/ பட்/ உதயபுரம் தமிழ் மகா வித்யாலயத்தின் கற்றல் செயற்பாடுகளுக்காக  தளபாட வசதிகளை பெற்று தருமாறு பாடசாலை  அதிபர்   விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க     22-மர தளபாடங்கள் ஒருபானை அமைப்பால்   கையளிக்கப்பட்டது , மேல் குறிப்பிட்ட பாடசாலை அதிபர் 87-மர தளபாடங்கள் பெற்று தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்   முதல் தொகுதி இன்று அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது
 வைத்திய கலாநிதி பாலசுப்ரமணியம் அவர்கள் ஒருபானை தொண்டு நிறுவனத்தில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அறங்காவலர் ஆவார். அவர் Friends of Batticaloa Hospitals UK இன் ஸ்தாபகத் தலைவரும், சிவானந்தா வித்தியாலய UK கிளையின் பழைய மாணவர் சங்கத்தின்ஆலோசகர்  ஒருவருமாவார்.இவரின் பிரதிநிதிகளாக    திரு J சாய் ராஜன் ,மற்றும் திரு  R-முருகதாஸ்  ஆகியோர் கையளிப்பு  நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்
மேலும்   பாடசாலையில் கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு , விருதுகள்  , மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டதோடு சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது .