தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில் கடந்த மாதத்தில் பணவீக்கம் 2.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 வீதமாகக் காணப்பட்டது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் -2.5 வீதமாகக் காணப்பட்ட இலங்கையின் உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதம் -5.4 வீதமாகக் குறைவடைந்துள்ளது.





