மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் பெரும்போக விவசாய ஆரம்ப கூட்டம் (22) திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் விவசாயிகளினால் விதை நெல் விதைக்கப்படும் காலம், உழவு இயந்திரத்திற்கான மற்றும் கூலியாட்களுக்கான செலவு விபரம், அறுவடையை அதிகரிக்க மேற்கொள்ளும் யுக்திகள் என்பன பிரதான விடயங்களாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, மண்முனை மேற்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன் உட்பட மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மத்திய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மாகாண மற்றும் மத்தி பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் மற்றும் ஏனைய திணைக்களங்கள் சார் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










