கிழக்கின் ஓவியத் திருவிழா -2023

 













































 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் , சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும்  இணைந்து நடத்திய கிழக்கின் மாபெரும்    ஓவியத் திருவிழா கண்காட்சி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 9. மணியளவில் ஆரம்பமாகியது . தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த ஓவியக்கண்காட்சி நடைபெற உள்ளது .
விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி , மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு ஓவியத் திருவிழாவை சிறப்பித்தனர் .
மேலும் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களும் , ஏராளமான பொது மக்களும் கண்காட்சியை பார்வையிட வருகை தந்திருந்தனர் .