மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடைபவனி நடைபெற்றது.

 

 


 மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடைபவனி நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் குகதாசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலை மைதானத்திலிருந்து ஆரம்பமான நடைபவனி மட்டக்களப்பு திருகோணமலை வீதியூடாக, ஏறாவூர் பகுதியை சென்றடைந்து, அங்கிருந்து திரும்பி பாடசாலை மைதானத்தில் முடிவடைந்தது.
1994 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற பழைய மாணவர்கள் நடைபவனியில் பங்கேற்றதுடன், பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒரு தொகை பணத்தினை கையளித்தனர்.
நடைபவனியில், பழைய அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.