கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஆலயங்களின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்க நடவடிக்கை.



(கல்லடி செய்தியாளர்)

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஆலயங்களின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுள்ள வகையில் சமூக மயப்படுத்தும் நோக்கில் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் கொழும்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில ஆலயங்கள் தமது வருமானத்திலிருந்து வருடாந்தம் இருபது சதவீதத்தினை தமது பிரதேசத்தில் வசிக்கும்                                                                  வறுமை நிலையிலுள்ள குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவா்கள் மற்றும்  பெண் தலைமைத்துவக் குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு கட்டாயம் செலவிடப்படுதல் வேண்டும் எனும் இரு தீா்மானம் மேற்கொள்ளப்பட்டது .

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளா் அனிருத்தனுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கிழக்கின் நூறு சிறுகதைகள் தொகுப்பு நூல், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்  பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனால்  வழங்கி வைக்கப்பட்டது.    .