இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க
உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி , எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம்
(யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக
காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.