மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!


















மட்டக்களப்பு தன்னாமுனையில்  (28) மாலை ஏஞ்சல் சிறுவர்அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அப்பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தில் இருந்து சிறந்த முறையில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக 20 துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏஞ்சல் சிறுவர் திட்டம் ஊடாக
10 இலட்சம் ரூபாய்க்கு மேல் பட்ட பொருட்கள் மெதடிஸ் திருச்சபை தன்னாமுனை ஏற்பாட்டில் இடம் பெற்றது

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்
தன பாலசுந்தரம்மற்றும் சிறப்பு விருந்தினர் அவர்களாக ஏறாவூர் பற்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோஸ்தர் இ.நிரோஷன், கிராம சேவையாளர்
ஜே. ஏ.சுரேஷ் நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.