மட்டக்களப்பு மாவடிமுன்மாரிப் பாடசாலைக்கு புதிதாக மாடிக்கட்டிடம் அமைக்க ஏற்பாடு!








(கல்லடி செய்தியாளர்)


கடந்த 2022 இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஐப்பான் மற்றும் இலங்கை சோசலிசக் குடியரசின் நட்புறவினதும் கூட்டுறவினதும் அடையாளமாக ஜப்பானிய மக்களால் 68,812 அமொிக்க டொலர் நிதியொதுக்கீட்டில் இலவசமாக மட்/மமே/மாவடிமுன்மாரி அ.த.க.பாடசாலைக்கு வழங்கப்படவுள்ள 25' x 70' விஷ்தீரணமுள்ள மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று புதன்கிழமை (30) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார், வீதி சிறுவர்கள் அமைப்பின் செயற்றிட்டப் பணிப்பாளர் அக்ஷலா மீனா விவேகானந்தன், முன்னைநாள் அதிபர் பி.தங்கவேல், பாடசாலை அதிபர் பே.சூரியகுமார், ஆசிரியர்கள், பெற்றோா்கள், பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.