காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய நபர் .

 


 

 அம்பாறை திருக்கோவில் மண்டானைக் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையொன்று வீடொன்றைச் சேதமாக்கியதோடு, பயிர்களையும் நாசமாக்கியது.
இன்று அதிகாலை மண்டானைக் கிராமத்தில் காட்டு யானை வீடொன்றைச் சேதமாக்கியபோது, அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தெய்வாதீனமாக
ஓடி உயிர் தப்பினர்.
வீட்டிலிருந்த அரிசிப் பையை எடுத்து உண்ட யானை, வீட்டில் வளர்க்கப்பட்ட பயன்தரு மரங்களையும் சேதமாக்கியது.
இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த கிராம சேவையாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேத விபரங்களை மதிப்பிட்டதுடன், அது தொடர்பில்
திருக்கோவில் பிரதேச செயலாளரிற்கும் தகவல் வழங்கினர்.