மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது

































 

 

 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி சுகுனன் வழிகாட்டலில் தொற்றா நோய் தடுப்பு பிரிவு மற்றும் சுதேச மருத்துவத் திணைக்களம் இணைந்து
முன்னெடுத்த யோகா விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,கிழக்கு பல்கலைக்கழகம், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகம்,
மாநகர சபை, தாதிய பயிற்சி கல்லூரி, மண்முனை வடக்கு பிரதேச செயலகம்,மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்
ஆகியவற்றைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.