தனக்கு பிறந்து இறந்த சிசுவின் சடலத்தை சாதாரண மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு தந்தையொருவர் பஸ்ஸில் பயணித்த சம்பவமொன்று மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவரது மனைவிக்கு தின்தோரி மாவட்டத்தில் அரசாங்க வைத்தியசாலையில், செவ்வாய்க்கிழமை (13) ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
குழந்தை பலவீனமாக இருந்ததால், மற்றுமொரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 15ஆம் திகதி குழந்தை இறந்து விட்டது. ஆனால் அந்த குழந்தையின் உடலை பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லையென கூறிவிட்டது. அதனையடுத்தே அந்த சிசுவை, தந்தை இவ்வாறு எடுத்துச் சென்றுள்ளார்
 

 
 




 
 
 
 
.jpeg) 
