நட்டத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச்சபையின் டிப்போக்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு தற்போதைக்கு 107 டிப்போக்கள் உள்ளன.
இவற்றில் சுமார் 40 டிப்போக்கள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
.குறித்த டிப்போக்கள் கிராமியப் பிரதேசங்களில் அமைந்துள்ளதாகவும் போக்குவரத்துச் சபை உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில்,
டிப்போக்களை நட்டத்தில் இருந்து மீட்டு இலாபகரமானதாக செயற்படுத்தும்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது பலனின்றி தொடர்ந்தும்
நட்டத்தில் இயங்கும் பட்சத்தில் குறித்த டிப்போக்களை மூடவேண்டி ஏற்படும்
என்றும் அந்த அதிகாரி தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.