பௌத்த மதம் மற்றும் கலாசாரத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான சமூக வலைத்தள செயற்பாட்டாளர் நடாசா எதிரிசூரிய கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அவரது கருத்தை யூ.ரியுப் தளத்தில் பதிவேற்றிய ப்ரூனோ திவாகரவை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணையிலும் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.