மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை விரைவில் திறந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது

 


மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள்ள விசேட  பொருளாதார மத்திய நிலையத்தை மிக விரைவில்  திறந்து  வைப்பதற்குத்  திட்டமிட்டுள்ளதாக  கிராமிய  பொருளாதார  இராஜாங்க  அமைச்சர்  காதர் மஸ்த்தான்   அவர்கள்  தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (14)  மாலை  அங்கு  விஜயம்  மேற்கொண்டு  இதுவரையில்  திறந்து  வைக்கப்படாமலுள்ள  விசேட  பொருளாதார  மத்திய  நிலையத்தைப் பார்வையிட்டு  வைத்து கருத்துத்  தெரிவிக்கும்  போதே  அவர்  இவ்வாறு  குறிப்பிட்டார்.

வ.சக்தி