மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால்
தகவல் அறியும் உரிமைச் சடடத்தின் மூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விளக்கமளிக்கும் செயலமர்வு
(18) நடாத்தப்பட்டது.
செயலமர்வில்
வளவாளர்களாக விடிவெள்ளி பத்திரிகை பிரதம ஆசிரியர் எம்.பி.எம.பைரூஸ், தகவல்
அறியும் உரிமையின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதும்
பத்திரிகையாளர்களுக்கான
உதவிக் குறிப்புகள் எனும் தலைப்பில் விரிவுரையை நடாத்தியதுடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபன திட்ட உதவியாளர் ஆர்த்தி இரவிவர்மன்
தகவல் அறியும் சட்டம் தொடர்பான கருத்துரையை வழங்கினார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூம் சார்ந்த 40 இற்கும் மேற்பட்டோர் செயலமர்வில் கலந்துகொண்டனர்.