2026 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்ட நடவடிக்கை நிறைவேற்றுவதற்கு இன்று காலை 11 மணிக்கு நூரலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் நடைபெற்றது இந்த வரவு செலவுத் திட்ட அறிவிப்பு கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 5 உறுப்பினர்கள்,
ஒருவர் சுகயீனம் காரணமாக சமூகமளிக்கவில்லை, 
தேசிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்கள்,
ஐக்கிய மக்கள் சக்தி 5 உறுப்பினர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினர்.
பொதுஜன பெரமுன 1 உறுப்பினர்.
சுயாதீனமாக 2 உறுப்பினர்கள்.
அண்ணா மலையக மக்கள் முன்னணி 1 உறுப்பினர்.
மக்கள் போராட்ட முன்னணி 1 உறுப்பினர்
மொத்தமாக அவை தலைவரோடு 23 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஆதரவாக அவை தலைவர் உட்பட 22 உறுப்பினர்களும் எதிராக ஒரு உறுப்பினரும் ஒரு உறுப்பினரும், ஒரு உறுப்பினர் சமூகமளிக்கவில்லை,
எதிராக மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மஸ்ரீ அவர்கள் மாத்திரமே வாக்களித்து இருந்தார்.
அத்தோடு 22 ஆதரவு வாக்குகளும் ஒரு எதிரான வாக்குவும் ஒருவர் சமூகமளிக்காமல் இருந்ததால் 22 வாக்குகளால் நுவரெலியா பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 கஜரூபன் திவ்யா நுவரெலியா
 

.jpeg)

.jpeg)

.jpeg)

 
 




 
 
 
 
.jpeg) 
.jpeg)