பால் சைவமா, அசைவமா?


Senthilnathan இன் தற்குறிப்பு போட்டோ

மாட்டின் பால் அதன் ரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, அதன் பாலை கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலை சைவம் என்றே கூறலாம்!! மாறாக மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்றால் மாட்டை கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே அதை அசைவம் என்று கருதலாம்!! அதேபோன்று…

முட்டையை பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அளிக்கப்படுவதால் அதுவும் அசைவமே!  தாவரத்தின் வேரிலிருந்து பெறப்படும் பூண்டு, வெங்காயம், மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாக பாவித்து உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதற்கு நாங்கள் கூறும் காரணம்…வேரிலிருந்து அப்பொருட்களை பெற வேண்டுமானால் அந்த தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனாள் அத் தாவரம் என்னும் பயிர் அழிக்கப்படுகிறது.(இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல) அதே சமயம் தாவரத்தில் இருந்து பெறப்படும் மற்ற காய்கறிகளை அது தாவரத்தைக் கொன்று பெறுவதில்லை என்பதால்.. அதையே சைவமாக கருதுகின்றோம்!!