மண்முனை வடக்கு மட்டக்களப்பு நகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு யோகா விழிப்புணர்வூட்டும் நிகழ்வு ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நிர்வாக உத்தியோகத்தர் தவலோஜினி சந்திரமோகன் தலைமையில் (14) நேற்று இடம்பெற்றது.
இதில் வளவாளராக டாக்டர் ஜே. பாஸ்கரன் பங்கேற்று உடல், உள ரீதியாக ஆற்றுப்படுத்தும் யோகா பயிற்சிகளை வழங்கி, பங்குபற்றுனர்களைப் பயிற்றுவித்தார்.
இவ்விழிப்புணர்வூட்டல், செயலக உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் நடைபெற்றது.
இந்நிகழ்வு பிரதேச செயலக சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.