தமிழ் என்கிற சொல்லுக்கு பொருள் என்ன?

  

 


-சித்தன் சரவணன்

*தமிழ்* என்ற சொல் , சித்தர்களால் மிக சூக்கமமாக, நுண்ணியமாக வடிவமைக்கப்பட்ட சொல். இதை தொல்காப்பியர் மருத்துவ, விஞ்ஞான, அறிவியல் நுட்பத்தோடு விளக்கியிருக்கிறார்.

*மொழி* என்பது மனிதனால் எழுப்பப்படக்கூடிய *ஒலிகள்/ஓசைகள்* அனைத்தையும் எடுத்து அதை நடைமுறைக்கு ஏற்றாற் போல் சீர்படுத்தி, பல இலக்கண விதிமுறையுடன், ஒருங்கிணைத்த தொகுப்பு.

சரி, அப்படியானால் மனித உடலில் எவ்வாறு ஒலிகள் ஏற்படுத்தப்படுகிறது? தொல்காப்பியர் இங்கிருந்துதான் தொடங்குகிறார்.

தொல்காப்பிய , எழுத்ததிகாரத்தில், பிறப்பியல் பகுப்பில் வரும் பாடல்/சூத்திரம்/மருத்துவ அறிவியல் தத்துவம்

*_உந்தி முதலா முந்து வளி தோன்றி

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலை_*

 

நம் மனித உடலில் ஒலி எவ்வாறு உருவாகிறது என்பதை மிக மிக சாதாரணமாக இரண்டே வரிகளில் விவரித்துள்ளார்.. அதாவது, நாம் சுவாசித்து உள் இழுக்கப்படும் காற்றை உந்தியில் ( Diaphragm) இருந்து தொடங்கி முன்னோக்கி(மேலே எழும்) வரும் காற்றை உடலில் 3 முக்கியமான இடங்களான தலையிலும், தொண்டையிலும், நெஞ்சிலும்* நிலைக்க வைக்கும்பொழுது (அதாவது காற்றை தடுத்து நிறுத்தும் பொழுது) ஒவ்வொரு விதமான ஒலிகள் பிறக்கின்றன.

இவ்வாறு இயற்கையாக பிறக்கும் எல்லா விதமான(all possible) ஒலியைத்தான் தமிழ் ஒலியாகவும், அதையே எழுத்துக்களாக வடிவம் கொடுத்து, மேலும் பல சூட்சமமான விடயங்கள் வடிவமைத்து இயற்கை மொழியாக தமிழை கட்டமைத்தனர் நம் *சித்தர்கள்* .

இந்த அடிப்படையில்தான் *வல்லினம், மெல்லினம் இடையினம்* பகுக்கப்பட்டது.

சரி தமிழ் என்றால் என்ன? இன்னும் வரவில்லையே..

இப்போது தொல்காப்பியத்தின் இன்னொரு அடிப்படையான சூத்திரமான * தமிழில் எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே* சூத்திரத்தை மேல் சொன்ன ஒலி உருவாகும் சூத்திரத்தின் அடியாக வைத்தால் *தமிழ்* பிறக்கும்.

அதாவது காற்றை *தம்முள்* இருந்து இயற்கையாக *இழுத்து* பேசும் ஒலி,

தம் + இழ் >> தமிழ்