கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றுக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

 


பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றுக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் குமுக்கன் வனப்பூங்கா பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

45 வயதான லிங்கசாமி கேதீஸ்வரன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் குமுக்கன் பகுதியில் பாத யாத்திரிகர்களுக்காக நடமாடும் வைத்திய சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் நோயாளர் காவு வண்டியில் திருக்கோயில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.