பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்துத் தங்கப் பொருட்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 4 போதை மாத்திரைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரை நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.