வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.

 

 


 மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலையில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற
குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டன.
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும்
வகையில், மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப்வாஸ் சபையினரால் முன்னெடுத்து வரும் கல்வி மேம்பாட்டுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பாதணிகள் வழங்கப்பட்டன.
ஜெகதீசன் ஹென்றியின் நிதி பங்களிப்பில், அமரத்துவம் அடைந்த ஜோசப் நவரெட்ணம் ஹென்றி, கலிஸ்டாமேரி ஹென்றி,கசிடி
பிரதீபன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாதணிகள் பாடசாலை அதிபர் துஸ்யந்தி
ஜெயவதனன் தலைமையில் வழங்கப்பட்டன .
நிகழ்வில் புனித ஜோசெப் வாஸ் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.