இலங்கை ரூபாய் பெறுமதி இன்று கணிசமான அளவு உயர்ந்துள்ளது

 


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று மேலும் அதிகாித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.297.28 ரூபாவாகவும், விற்பனை விலை 314.38 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

நேற்று அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.297.53 ரூபாவாகவும், விற்பனை விலை 315.12 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.