விலைக் குறைப்பை மக்கள் அனுபவிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

 


அரசாங்கம் பொருட்களுக்கான விலைகளைக் குறைக்கின்ற போதும், விலைக் குறைப்பை மக்கள் அனுபவிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.