விவசாயத் திணைக்களமும், விவசாய நவீன மயமாக்கல் திட்டமும் இணைந்து நடத்திய விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மாதுளை மற்றும் வாழை பயிரிடும் பயனாளிகளுக்கான நீர்ப்பம்பி வழங்கிய நிகழ்வு இன்று சனிக்கிழமை (10) கல்லடி சண்சைன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வர்த்தக, வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், விவசாய விரிவாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் கலீல், மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வி.பேரின்பராசா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பயனாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 350 பயனாளிகளுக்கு நீர்ப்பம்பி வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் எதிர்காலத்தில் 3000 பேருக்கு நீர்ப்பம்பி வழங்கப்படும் என்றார்.


















































