உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு வாகரைசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் விழிப்புணர்வு நடைபவனிப் பேரணி மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி கதிரவெளி கதிரா எகெடமி வரவேற்பு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கொடிய தொழு நோயால் இந் நடைபவனி பொதுமக்களுக்காக விழிப்புணர்வூட்டும் வகையில் கதிரவெளி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் கட்டுமுறிவு சந்தி தொடக்கம் திருகோணமலை பிரதான வீதி ஊடாக கதிரா எகெடமியை வந்தடைந்து அங்கிருந்து கண்காட்சி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
தொழு நோயாளர்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நோயாளர்கள் என சமூகத்திலிருந்து இணங்காணப்பட்டு ஒதுக்குதல் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பதுமாக எனும் தொனிப்பொருளில் இப் பேரணி இடம் பெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியானது வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் த.சசிந்த மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பு.சோதிராஜ் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் லிபோஜிதா மற்றும் தொழுநோய் பொதுச் சுகாதார பரிசோதகர் சோ.தீபகுமரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் வாகரை பிரதேச சபை கெளரவ தவிசாளர் தெய்வேந்திரன் , வேர்ல்ட் விஷன் நிறுவன முகாமையாளர், வேர்ல்ட் விஷன் நிறுவன சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் , கதிரவெளி பாடசாலை அதிபர் இராமசந்திரன் மற்றும் வாகரை பாடசாலை அதிபர் கமலநாதன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு கவேரி கலா மன்றம் ஊடாக வீதியோர விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் கதிரவெளி பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.
இதில் பிரதேச சபை ஊழியர்கள் , பிரதேச செயலக ஊழியர்கள், தாய்மார் கழக உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்கள் , பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாடசாலையின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிகமாக தாய்மார் கழகங்கள் ஊடாக வேர்ல்ட் விஷன் அனுசரணையுடன் போசாக்கு உணவு தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றது.















































