அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் நிவாரணத்தை மக்களுக்கு
வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சிரமங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மின்சாரக் கட்டணம் அதிகம். எரிபொருளின் விலை அதிகம்.
ஜனவரி
1 ஆம் திகதி மின்சாரத் திருத்தத்திற்கான முன்மொழிவை நவம்பரில் தாருங்கள்
என்று நான் சொல்கிறேன். இப்போது ஜூலையில் மேற்கொள்ளும் திருத்தத்தின் ஊடாக
சில அளவில் குறையும். 0 – 30, 30 – 60, 60 – 90 வரையான குறைந்த பட்ச
மின்சார அலகுகளை பயன்படுத்தும் குழுவிற்கு 27வீத மின் கட்டணத்தை குறைக்க
முன்மொழிந்துள்ளோம். ஜனவரியில் இந்த திட்டத்தை கொண்டு வந்து மின்
கட்டணத்திற்கு உறுதியான நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.