கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன.
உள்ளூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கும் வகையில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காயம் அடைந்துள்ள பயணிகள் சிகிச்சைக்காக பாலசோர் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 400 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிக்கை பெறுகின்றனர். 22 பேர் அடங்கிய தேசிய மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. R