33 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கே உதவிகள் வழங்கப்பட்டன.

 


பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு
கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

33 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு பத்மநாபா மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
கொக்கட்டிச்சோலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கே உதவிகள் வழங்கப்பட்டன.

பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான தோழர் சுகு ,தோழர் மோகன் மற்றும் பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் உட்பட கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.