துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

 


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

ஆறு மாதக் காலப்பகுதியில் 40 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேல் மற்றும் தென் மாகணங்களில் அதிகளவு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.