Freelancer
கிழக்கு
மாகாணத்தில் சக்தி வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு -
புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கானது கடந்த
ஞாயிற்றுக்கிழமை (11)திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக
பகல்,இரவு பூஜைகள் இடம்பெற்று நோற்புநூல் கட்டி ஆயிரக்கணக்கான பக்த
அடியார்கள்,வேதாதிகள் புடைசூழ்ந்து ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (16)பிற்பகல்
4.00மணியளவில்
தீ மிதிப்பு வைபவம் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது
மட்டக்களப்பு
மாவட்டத்தின் பல பாகங்களிருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் தமது
நேர்த்தி கடனை நிறை வேற்றும் பொருட்டு பக்தி பரவசத்துடன் தீ மிதிப்பு
நிகழ்வில் கலந்துகொண்டனர்.