கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கை.




கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்கள் குழுவிற்கும், வைத்தியர் சீதா அரம்பேபொல நிபுணர் குழுவிற்கும் தலைமை தாங்குகின்றனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.