சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை போதைப்பொருள் பாவனையில்
இருந்து காப்பாற்ற அனைவரின் பங்களிப்பும் அவசியம் எனவும் மது மற்றும்
போதைப்பொருள் தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது.