இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் முடிசூட்டு விழா இன்று; பிரமாண்ட ஏற்பாடுகள்: விழாக்கோலம்!


கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் இப்போதே தயாராகி வருகிறது.

விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

லண்டன்: சினிமாவில் தான் மன்னர் ஆட்சி, பிரமாண்டமான அரண்மனை, குதிரை பூட்டிய சாரட் வண்டி போன்ற காட்சிகளை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் இந்த காலத்திலும் பாரம்பரியமிக்க இது போன்ற காட்சிகள் நிஜத்தில் அரங்கேறி வருவது பெருமைப்பட கூடிய விஷயம்.

முடியாட்சி முறை போற்றி பாதுகாக்கப்படும் இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின் முடிசூட்டு விழா இன்று (6) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.