தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய திரைப்பட நடிகர் உலகநாயகனும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ளஸ் மற்றும் ராணி துணைவியாரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள பிரித்தானிய துணை உயர் ஸ்தானிகர் இரவு விருந்துபசார நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனும் பங்கேற்றார்.நிகழ்வில் கமல்ஹாசனை சந்தித்த இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர், எதிர்காலத்தில் இலங்கைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் உலகநாயகன் இலங்கைக்கு வருவாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.இதேவேளை இலங்கையில் வாழும் கமல் ரசிகர்களும் அவரது இலங்கைக்கான வருகையை எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.