TAMIL MIRROR
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) புத்துயிர் அளிக்கும் முயற்சியை அதிகாரிகள் கொச்சியில் முறியடித்ததை அடுத்து சென்னையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியழக்கிழமை சென்னையின் 8 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், 82 இலட்சம் ரூபாய் பணம், 300 கிராம் தங்கம், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன.
என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் இவர் கைதாகினார்.