கடற்றொழிலாளர் ஒருவர், இந்திய கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

 

 


 

இலங்கையில் இருந்து கடத்தல், வெளிநபர்களின் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு காவல்துறைமா அதிபர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் - தனுஷ்கோடியில் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனுஷ்கோடி கடலோர காவல் நிலையத்திற்கான களப்பயணத்தில் ஈடுபட்ட அவர், கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மண்டபம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த போதைப்பொருட்கள், உரம், மஞ்சள் போன்றவற்றை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டவர்களை கைது செய்த காவல்துறையினரை பாராட்டியுள்ளார்.

இந்தநிலையில், தமிழகத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் 824 பேருக்கு இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, நாகபட்டினத்தில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பயிற்சியின் ஊடாக கடற்றொழிலாளர் ஒருவர், இந்திய கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.