உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது .

 


 சதொச நிறுவனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது.

சதொச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, மற்றும் சிவப்பு பருப்பு ஆகியனவற்றுக்கே விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 375 ரூபாவிற்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 149 ரூபாவிற்கும், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 198 ரூபாவிற்கும், சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 358 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.