மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் அரசாங்கத்தின் பிரதேச செயலகங்கள்  ஊடாக நெல் கொள்வனவு செய்யும் திட்டத்தின் பிரகாரம் 
 பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரால் நெல் கொள்வனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
இதன்போது 14% வீதமான காய்ந்த நெல் ஒரு கிலோ 100 ரூபா வீதமும், பச்சை நெல் 14% வீதம் தொடக்கம் 22% வீதம் வரை ஒரு 
 கிலோ நெல் 88 ரூபா  வீதமும் கொள்வனவு செய்யப்படுகின்றது. 
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்காக இந்நெல் கொள்வனவிற்கு  9.52 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை விவசாயிகளிடமிருந்து 14,750கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு  பிரதேச விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல பெரும்பாக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)

 



