போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் அதிரடியாக கைது -மட்டக்களப்பில் சம்பவம்

 


மட்டக்களப்பு ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான தையல் தொழில் செய்பவர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன்  வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் பி.கே. திலகரெத்தின தெரிவித்தார்

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு ஏறாவூர் காவல்துறையின் இரண்டு பிரிவுகள் ஒரே நேரத்தில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில் காத்தான்குடி எப்.சி. வீதியில் வியாபாரத்துக்காக போதைப் பொருளை எடுத்துக் கொண்டு சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

 அதேவேளை ஏறாவூர் காவல் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் வைத்து அந்த பகுதியில் ஆடைகள் தைக்கும் உரிமையாளரான வியாபாரியை 110 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.