இந்திய வான் பரப்பில் மர்ம பலூன் .

 

உலகின் பல இடங்களிலும் மர்மப் பொருட்கள் வானில் தொடர்ந்து பறக்கும் நிலையில், இந்தியாவிலும் முக்கிய தீவுக் கூட்டங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தான் தங்கள் வானில் மர்மப் பொருட்களைப் பார்த்ததாக கூறியிருந்தனர். 

இதற்கிடையே இப்போது இந்தியாவிலும் இதுபோன்ற மர்மப் பொருட்கள் வானில் பறப்பது காணப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஓராண்டிற்கு முன்பு, வங்கக் கடலில் அமைந்துள்ள இந்தியாவுக்குச் சொந்தமான தீவு கூட்டம் ஒன்றில் அங்குள்ள உள்ளூர்வாசிகள் வானில் ஒரு அசாதாரண பொருளைக் கண்டுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வீழ்த்தியதைப் போன்ற ஒரு பெரிய பலூனை அவர்கள் வானில் கண்டதாகக் கூறப்படுகிறது.

 


 

அந்த சமயத்தில் அது என்னவென்று அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.. அந்தமான் மற்றும் நிக்கோபாரின் சில தீவுகளிலிருந்து இந்த பலூன் தெளிவாகத் தெரிந்துள்ளது. 

பொதுமக்கள் பலரும் அதை போட்டாவோக எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இப்படியே ஒரே நேரத்தில் பலரும் அந்த மர்மப் பொருள் குறித்து படங்களைப் பகிர்ந்த நிலையில், இந்திய உளவு அமைப்புகள் விசாரணையில் இறங்கின.

இருப்பினும், அப்போது அவர்களாலும் துல்லியமாக எதையும் கண்டறிய முடியவில்லை. ஏனென்றால், இந்த பலூன் வங்காள விரி குடாவில் இந்தியாவின் ஏவுகணை சோதனை நடத்தும் தீவுகளுக்கே அருகே.. மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.. 

இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது அமெரிக்கப் பகுதியில் நுழைந்த சீன பலூன் உளவு பார்ப்பதாகக் கூறி அதை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இந்தச் சூழலில் கடந்தாண்டு நடந்த சம்பவம் குறித்து இந்தியா மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் விரைவாகப் பதிலளிக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்..

திடீரென இந்த தீவு கூட்டம் அருகே நுழைந்த அந்த பலூன், அங்கு இருக்கும் பல இந்திய ரேடார் அமைப்புகளைத் தாண்டி சென்றதாக அதிகாரிகள் தெரிக்கிறார்கள். அந்த பலூன் யாருடையது அதைச் சுட்டு வீழ்த்தலாமா என்பதை முடிவு செய்யும் முன், அந்த பலூன் தென்மேற்கே கடலுக்குள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போதும் கூட அது எந்த நாட்டின் பலூனாக இருக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் கூற மறுக்கிறார்கள்.